Date:

ஜனாதிபதியுடன் சஜித் கைகுலுக்காதது ஏன்?

வேட்புமனுத் தாக்கல் நாளின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைகுலுக்கத் தவறியமை தொடர்பில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ் வேளையில் சஜித் வேறு வேலையில் ஈடுபட்டிருந்ததால் எழுந்து நின்று வாழ்த்த முடியாமல் போனதாகவும் SJB இன் துணைத் தலைவர் சுஜீவ சேனசிங்க இன்று தெரிவித்தார்.

“சிலர் இந்த விஷயத்தைப் பற்றி தேவையில்லாத வம்புகளை உருவாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி பிரேமதாசவை ஜனாதிபதி விக்ரமசிங்க கைகூப்பி வாழ்த்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ‘ஆயுபோவன்’ என்று கூறி வாழ்த்துவது ஆரோக்கியமானதாகவும், இனிமையாகவும் இருக்கும் என்பதோடு, வாழ்த்துவதற்கான சிறந்த வழியாகவும் இருந்திருக்கும். இதுவே உண்மையான இலங்கை வாழ்த்து முறையும் கூட” என அவர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“ஆனால் நிச்சயமாக, கமலா ஹரிஸை ஒருவர் கைகோர்த்து ஆயுபோவன் என்று கூறி வாழ்த்த முடியாது,” எனவும் அவர் கூறினார்.

பிரேமதாச ஜனாதிபதியுடன் கைகுலுக்காமல் அகங்காரத்துடன் நடந்துகொண்டார் என தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த சேனசிங்க, அந்தக் கருத்தை வெளியிட்டதன் மூலம் அநுர தனது ஆணவத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை தொடர்பான புதிய அறிவிப்பு..!

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சையின் முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு...

அனர்த்த நிலைமை; நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90...