முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 41(1) சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் இந்த நியமனங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் வழங்கப்பட்டுள்ளன.