கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையினால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் கடந்த 2 மணித்தியாலங்களாக கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.