அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மூன்றாவது பைஸர் கொவிட்-19 தடுப்பூசியை நேற்று பெற்றுக்கொண்டார்.
வெள்ளை மாளிகையில் அவர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
78 வயதான ஜனாதிபதி ஜோ பைடன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் பைஸர் தடுப்பூசியையும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் பைஸர் தடுப்பூசியையும் அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரச சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல் கோவையின் பிரகாரம், அவர் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.