பால்மா, சீமொந்து, கோதுமை மா மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியவாசிய பெருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அரிசிக்கான அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலை விதித்து வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அமைச்சரவை நீக்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.