Date:

12 மணி நேர நீர் வெட்டு

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை முன்னிட்டு பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர்விநியோகம் தடைப்படுவதனால் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 தொடக்கம் இரவு 9.00 மணி வரையிலான 12 மணி நேர நீர் வெட்டு பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பை சபை அறிவித்துள்ளது

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபைகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கந்தான, மினுவங்கொடை பிரதேச சபை பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபை நிர்வாக எல்லையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலாக்கப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...