ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08) தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில்லை என ஜூலை 30 ஆம் திகதியன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.