வடக்கு, கிழக்கில் சீன இராணுவத்தை நிலைநிறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை சீன இராணுவத்தினரை நாட்டுக்குள் கொண்டுவரும் திட்டத்தை அரசாங்கம் அனுமதிக்கின்றதா என கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அரையாண்டின் அரசிரை நிலைப்பாட்டு அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.