Date:

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயற்சி ; ஒருவர் உயிரிழப்பு

சீதுவ – கொட்டுகொட பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி செயற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீதுவை பகுதியில் பொலிஸ் குழுவொன்று கார் ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, காரிலிருந்த நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, துப்பாக்கி செயற்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கியை வைத்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், துப்பாக்கியை பறிக்க முயற்சித்த நபரின் கழுத்தில் துப்பாக்கி சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காயமடைந்த இருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துப்பாக்கியை பறிக்க முயற்சித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பூகொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...