ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தயாசிறி ஜயசேகர தரப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் கட்சியின் அமைப்பாளர்கள் இன்று கூடிய வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கின்றார்.