Date:

புத்தகத்தில் தாள்களை கிழித்த ஆசிரியை கைது

புத்தகத்தை பிடுங்கி அதிலிருந்து   தாள்களை கிழித்து வீசிய ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

புறக்கோட்டை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் இணைந்ததாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் வசமிருந்த தற்காலிக சாரதி அனுமதி வழங்கும், புத்தகத்தை அபகரித்து அதிலிருந்த தாள்களை கிழித்து வீசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை டைட்டஸ் கட்டிடத்துக்கு அருகில், கடமையில் இருந்த போது, தடை செய்யப்பட்ட பிரதேசத்தில் வாகனத்தை நிறுத்தி இருந்ததாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது சாரதி எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாரானபோது, சாரதியின் மனைவியான ஆசிரியர், அந்த பொலிஸ் அதிகாரியின் வசமிருந்த  தற்காலிக சாரதி அனுமதி வழங்கும், புத்தகத்தை அபகரித்து பக்கங்களை கிழித்து வீசியெறிந்து மிகவும் ஆவேசமாக நடந்து கொண்டுள்ளார்.  பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலையைச் சேர்ந்த 53 வயதான ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

amazon college and campus

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Big Breaking கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெருந்தொகை நிவாரணம் – தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...