இலங்கையில் தங்க விற்பனை விலை நேற்றுடன் (31) ஒப்பிடுகையில் 24 கரட் தங்கத்தின் விலை 1000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் (31) 197,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம், இன்றைய தினம் (01) 198,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நேற்றைய தினம் (31) 181,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம், இன்றைய தினம் (01) 181,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நிலைமை ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலேயே, தங்க விலை அதிகரிப்பதாக துறைசார் வல்லுநர்கள் தெரிவித்தனர்.