
அவற்றில் 95 சத வீதமானவை லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் மூலம் 37 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்கப்பட்டது. முட்டை இறக்குமதிக்காக வழங்கப்பட்டுள்ள காலப்பகுதி 2024.04.30 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
அதற்கமைய, எதிர்வரும் ரமழான் மற்றும் நத்தார் கொண்டாட்டக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காகவும், கேக் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்குத் தேவையான முட்டைகளை விநியோகிப்பதற்குத் தேவைiயான முட்டைத் தொகையை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.