Date:

Breaking டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டார்

amazon college and campusஇஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது. 90,589க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இஸ்ரேல் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரானில் கொல்லப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

அவரது கொலை குறித்து இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு...

ஒன்றரை கோடி பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காய் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம்...