வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரத்தியேக பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கு அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆகஸ்ட் மாதம் முதல் கட்டம் கட்டமாக வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர், அதற்கான நடைமுறையை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.