ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லாஹ் பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் (24) இன்று அவர் மேலும் பேசும்போது , கொரோனா ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்புக் கேட்டது நல்லது. ஆனால் அதுவல்ல. ஜனாஸா எரிக்கப்பட்டமை குறித்து நான் பல தடவைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பியுள்ளேன்.
இந்தப் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிப்பதற்கு வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வெளியிட்டார். பாராளுமன்றத்தின் சிறப்புரிமையும் மீறப்பட்டது. மன்னிப்புக் கேட்பதை விட, அதற்கான தண்டனையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை, இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.