Date:

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொலை சம்பவம்; மேலும் இருவர் கைது

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

க்ளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டின் கீழ் குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தப்பிச் செல்வதற்கு உதவியை வேனின் சாரதியும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், சந்தேகநபர்களை பஸ்ஸில் அழைத்து சென்ற சாரதியும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக கூறப்படுகிறது.

வெளிநாடொன்றில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் நிழலுலக தலைவருடன், வாட்ஸ் அப் ஊடாக இந்த சந்தேகநபர்களில் தொடர்பில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...