 கல்விக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையின் ஊடாக நாட்டை கல்வி கேந்திர நிலையமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வேன். இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வருவதற்கு கல்வி என்பது எமக்கு பிரதான காரணிகளில் ஒன்றாக அமைந்து காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 343 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன
கம்பஹா, பியகம, மல்வான, உலஹிட்டியாவல அல் மஹ்மூத் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

சகல பிரதேச செயலகத்திலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிப்பேன். இதில், புதிய தொழில்களை தொடங்குவதற்கான தொழில்முனைவோரை உருவாக்கும் திட்டத்தை கொண்டு வருவேன். இதன் கீழ், ஒரு மில்லியன் புதிய தொழில்முனைவோர் உருவாக்கப்படுவதோடு, முக்கிய பணியாளர்களும் மனித மூலதனமும் இங்கு உருவாக்கப்படும். தொழிநுட்பத்தை கிராமத்துக்கு கொண்டு சென்று மனித மூலதனத்தின் பெருமதியை கூட்டும் நடவடிக்கையை இதனால் எதிர்பார்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் பல்வேறு மாநாடுகளை நடத்தி டிஜிட்டல் இலங்கையை உருவாக்குவோம் என்று கூறுகிறார்கள். டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்துவோம் என்று நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து கொண்டு கூறிவருகின்றனர்.
 இவற்றைச் சொல்வதற்கு முன் பாடசாலைகளில் தரம் 1-13 வரை தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்பட வேண்டும். இது ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட வேண்டும். பொய்யாக வீராப்பு பேசுவதற்கு பதிலாக வளங்களின் பற்றாக்குறைக்கு தீர்வை தேடிக் கொடுப்பதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.