ஓமானில் திங்கட்கிழமை (15) அதிகாலை கவிழ்ந்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 03 இலங்கையர்கள் பயணித்தனர்.
இதனையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணியில், இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளது.
கப்பல் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இதுவரை 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.