ஓமானில் திங்கட்கிழமை (15) அதிகாலை கவிழ்ந்த கப்பலிலிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட கப்பல் பணியாளர்கள் கடத்தப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கலாமெனக் கூறப்படுகிறது.
கப்பலிலிருந்த இலங்கையரொருவரின் அலைபேசிக்கு றோமிங் முறையில் இன்று தொடர்பு கொண்டபோது வேற்று மொழியில் இருமுறை யாரோ பதிலளித்ததுடன், இரு முறை அந்த அழைப்பை எடுத்து விட்டு பதிலளிக்கமால் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே குறித்த இலங்கையரின் அலைபேசி அவ்வப்போது இயங்குகையில் கப்பற் பணியாளர்கள் கடத்தப்பட்டிருக்கலாமென ஊகம் நிலவுகிறது.