நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சிறுவர் நோயியல் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அறிவாற்றல் குறைந்த, நீரிழிவு, நரம்பியல் நோய்கள், சிறுநீரக பாதிப்பு, இதயநோய், தலசீமியா, சிறுநீர் மற்றும் உணவுக் குழாய் பாதிப்புகள் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களை, இந்தத் தடுப்பூசி செலுத்தலுக்காக அழைத்துவருமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, 12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாட்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி செலுத்தல் இடம்பெறும்.
15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த நடவடிக்கை, வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.