பேரூந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முருதலாவ, தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென்று தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்ஸில் குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின்னாலுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நபர் பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டமையை தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் குறித்த சம்பவத்தை எதிர் கொண்ட யுவதி, சந்தேக நபரையும், அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
மடவளை பிரதேசத்தில் வசிக்கும் குறித்த யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் மேற்படி சம்பவத்தை எதிர் கொண்டுள்ளார்.
அவருடைய முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்து இது தொடர்பான உண்மைத் தன்மையை விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.