Date:

இணையத்தில் பதிவேற்றிய கண்டி நபர் கைது

இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் உருவான சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிங்ஹபாகு திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றியமை தொடர்பில், இயக்குநர் கலாநிதி சேமரத்ன திஸாநாயக்க, கொழும்பு கணிணி குற்றத் தடுப்பு பிரிவில் கடந்த வாரம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்தே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல கோடி ரூபா செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், இலங்கையில் தற்போது வெற்றி திரைப்படமாக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாராளுமன்றில் ஐஸ்: சபாநாயகர் பணிப்பு

ஐஸ், போதைப்பொருளை பாராளுமன்ற  சேவையாளர்கள் பாவிப்பதாகவும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை...

மஹிந்தானந்த, நளின் வழக்கு – உத்தரவு அறிவிப்பு…

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மேஜர்...

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்

கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் நேற்றையதினம் (4) பிற்பகல் வெடிக்காத நிலையில்...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம்...