Date:

திகன கலவர விசாரணை அறிக்கை எங்கே?

முஸ்லிம்மக்களுக்கு எதிரான திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.எனவே இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து கூறுகையில்,

முஸ்லிம்மக்களுக்கு எதிராக 2018இல் திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாணை மேற்கொண்டது. ஆனால் கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப் படவில்லை.

எனவே அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலையில் மாற்றம்.. வெளியான அறிவிப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31)...

சிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான...

சதம் கடந்த பெத்தும் நிஸ்ஸங்க

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தமது 7வது ஒருநாள்...

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட...