கடந்த செவ்வாய்க்கிழமை 9.7.2024 அன்று சிலாப வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதிற்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி அல் ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலய அணி இரண்டாம் இடத்தைப் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐந்து பலம் பொருந்திய அணிகள் போட்டியிட்ட இத்தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான மாதம்பை அல் மிஸ்பா அணியும் கொட்டராமுல்லை அல் ஹிரா அணியும் முழு நேர முடிவில் கோள்கள் எதுவும் பெறாத நிலையில் சமநிலையாக இருந்தது. அதனைத் தொடர்ந்து பெனால்டி (penalty) முறைப்படி 3:1 என்ற கோல் கணக்கில் மாதம்பை அல் மிஸ்பா அணி வெற்றி பெற்றது.
அதனை அடுத்து இறுதிப் போட்டிக்கு தெரிவான இரண்டு அணிகளும் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது
மேலும் கொட்டராமுல்லை அல் ஹிராவின் இந்த வெற்றிக்காக அயராது உழைத்த பாடசாலை ஆசிரியர்களான ஜஸீம், ஹென்றி ,உதைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பர்ஸான், பாடசாலை பழைய மாணவர்களான இக்பால் ஹாஜி, சில்ஹான் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.