Date:

சண்முகம் குகதாசன் இன்று சத்தியப்பிரமாணம்

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உடல் நலக் குறைவினால் கடந்த வாரம் காலமானார். இதனையடுத்து அவரது பாராளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் நிலவியது.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 16,770 விருப்பு வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சியின் பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்த இடத்தினை சண்முகம் குகதாசன் பெற்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி இலவசம்!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக்...

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...