Date:

(video) ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

கொழும்பு -12 ஹமீத் அல் ஹூசைனியா பாடசாலையின் பழைய மாணவத்தலைவர்களின் ஏற்பாட்டில் ஐந்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜுலை மாதம் ( 14ஆம் திகதி 2024) சாலிக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டித் தொடர் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான சந்திப்பு மற்றும் பங்குபற்றும் அணிகளின் சீறுடை (jersey) அறிமுக நிகழ்வு மிக விமர்சையாக நேற்றைய தினம் வௌ்ளம்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஸ்ட சட்டத்தரணி திரு. முனீர் தௌவ்பிக் மற்றும் சிறப்பு அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம் மரைக்கார் கலந்துகொண்டனர்,

மேலும், அதிதிகளாக பாடசாலையின் அதிபர் திரு. எம்.ஆர்.எம். ரிஸ்கி , பாடசலையின் மாணத்தலைவர்களுக்கான பொறுப்பு ஆசிரியை திருமதி ஓ.எஸ்.எப். ஸாமா, பழைய மாணவர்கள் சங்கக்குழுவின் செயலாளர் திரு.இம்தியாஸ் இல்யாஸ், பாடசலை அபிவிருத்தி சங்க குழுவின் செயலாளர் திரு. சப்ராஸ் பைஸால், பழைய மாணவர் சங்க குழுவின் விளையாட்டுத்துறை பொறுப்பாளர் திரு. எம்.சீ.எம். அஜ்வத் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஒழுக்காற்று குழு பொறுப்பாளர் திரு. ஏ. ஆர். எம். இம்தியாஸ், பழைய மாணவ தலைவர் சங்கத்தின் தலைவர் திரு. அஹ்லான் அமானி மற்றும் இப்போட்டி தொடர் ஏற்பாட்டின் தலைவர் திரு. கியூ.எம்.எம் ஹிராஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் போட்டித்தொடரில் பங்கு கொள்ளும் அணிகளின் தலைவர்கள், பாடசாலையின் மாணவத்தலைவர்கள் மற்றும் இப்போட்டி தொடருக்கான அனுசரணையாளர்களும் கலந்துகொண்டனர்.

இப்போட்டித் தொடரில் வெற்றி கொள்ளும் அணிக்கான கிண்ணம் மற்றும் விளையாட்டு சீறுடைகள் பிரதம அதிதிகளால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

மேலும், அனுசரணையாளர்களுக்கான நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம்...