நாட்டிலுள்ள சுமார் 200 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன்படி, நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
கிராம சேவை உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட பொதுத் துறையில் உள்ள 200 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.