மேல், சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடும் மின்னல் தாக்கங்களுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.