நாட்டு மக்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.
காய்ச்சல், வாந்தி, இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.
இந்த வைரஸ் பெரும்பாலும் சுவாசத்தின் மூலம் உடலுக்குள் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், வைரஸ் தாக்கத்தை தவிர்த்துக்கொள்ள முகக் கவசம் அணிவது கட்டாயம் என அவர் கூறுகின்றார்.
இரண்டு நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்படும் பட்சத்தில், வைத்தியர் ஒருவரை நாடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும்,இந்த வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.