Date:

பியுமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் கண்டுபிடிப்பு!

விமானம் மூலம் போதைப்பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் நாவலாவின் வீட்டில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருட தொடக்கத்தில் கூரியர் சேவை நிறுவனமொன்றுக்கு 5 கிலோ கொக்கெய்ன் மற்றும் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர், பொலிஸாரைத் தவிர்த்து நீண்ட நாட்களாக தலைமறைவாகியிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  முன்னெடுக்கப்பட்ட சோதணையில் பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி பெயரில் பதிவு செய்யப்பட்ட பி.எம். டபிள்யூ. சொகுசு கார் ஒன்றும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக...

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில...

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...