கதிர்காமம் தேவாலயத்தை அண்மித்துள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் தேவாலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில், வருடாந்த எசல பெரஹெராவை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பிரதேச செயலகம் தெரிவிக்கின்றது.
இதன்படி, தெடகமுவ கனிஷ்ட வித்தியாலயம், கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் உயர் வித்தியாலயம், சசீந்திர குமார மாதிரி ஆரம்ப பாடசாலை மற்றும் கோதமி கம கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவை மூடப்படவுள்ளன.
குறித்த பாடசாலைகளில் பெரஹெராவில் பங்குபற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய குழுக்களை சேர்ந்தவர்கள் தங்க வைக்கப்படவுள்ளனர்.