கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை முதல் எதிர்வரும் 17 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஜுலை 06ம் திகதி முதல் இம்மாதம் 22ம் திகதி வரை கதிர்காமம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.
கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.