
அக்குரணை பகுதியிலுள்ள மிலானோ உணவக கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக கண்டி தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த தீ இன்று காலை பரவியதாகவும் தீயணைப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவற்காக மூன்று தீயணைப்பு வாகனங்களும், ஒரு பௌசரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,
தீ ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவல் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அக்குரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



                                    




