Date:

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று – கலாநிதி இல்ஹாம் மரைக்கார்

இரா. சம்பந்தன் அவர்களின் மறைவு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அமேசான் கல்லூரி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் பூத உடலுக்கு இறுதி அஞ்சலி பலரும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு பொளையில் அமைந்துள்ள தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டு இருக்கின்ற அன்னாரது பூத உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இல்ஹாம் மரைக்கார் இங்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை அரசியலில் அனுபவரீதியான அரசியல்வாதி மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலும் துணிந்து தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒருவராக அமரர் இரா சம்பந்தன் இருந்திருந்ததாக நினைவு கூர்ந்தார்.

இலங்கை அரசியலிலும் தமிழ் மக்களின் அரசியலிலும் குறிப்பாக இரா சம்பந்தன் என்கின்ற பெயர் மிகவும் பிரபலமான தொன்று என்று குறிப்பிட்ட அவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் துணிந்து எவருக்கும் அஞ்சாமல் குரல் கொடுக்கக்கூடிய திறமை கொண்ட ஒருவராக அவர் இருந்திருப்பதாக சுட்டி காட்டினார்.

அன்னாரது இழப்பு தமிழ் மக்களது அரசியலுக்கு பேரிழப்பாகும் என்று குறிப்பிட்ட அவர் அவரது இழப்பால் வேதனையுட்ரிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாகவும் கலாநிதி இல்ஹமது மரைக்கார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள்...

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...