பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 07.07.2024- ஞாயிற்றுக் கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பு 09 தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வர்த்தக, வாணிப அமைச்சரும் அ.இ.ம.கா. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களும் விசேட அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அனுஷா கோகுல பெர்ணாண்டோ அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.