Date:

நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மோதல் (clicks)

நுவரெலியா நிருபர் – செ.திவாகரன்

நுவரெலியா தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இனந்தெரியாத நபர்களால் நேற்று (30) இரவு நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துக்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகளை தாக்குதல் நடத்தி உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் (01) நுவரெலியா – தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் பேருந்துக்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்காரணமாக பாடசாலைசெல்லும் மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியுடன் மாலைத்தீவு சென்ற ஏழு பேரின் வேலை போனது

ஜனாதிபதி அனுரகுமாரவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது, கட்டுநாயக்க  விமான நிலையத்தில் Duty...

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...