பல கோரிக்கைகளை முன்வைத்து, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பொலிஸாரின் தடையை உடைத்து லோட்டஸ் வீதியை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக புறக்கோட்டை,ஒல்கொட் மாவத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படங்கள் எம்.நசார்