Date:

இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாட இன்று ரஷ்யாவிற்கு தூதுக்குழு

ரஷ்யா – உக்ரேன் போரில் போரிடுவதற்கு ரஷ்யாவின் கூலிப்படையில் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவுள்ளது.

இந்த தூதுக்குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காமினி வலேபொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் இந்த குழுவில் தயாசிறி ஜயசேகர. ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க உள்ளிட்டோரும் உள்ளடங்குகின்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி மொஸ்கோவில் அந்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பதுடன், ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...