Date:

அனைத்து வாகன சாரதிகளுக்குமான விசேட அறிவித்தல்

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை சாரதிகள் இன்றி பொலிஸ் அதிகாரிகள் அகற்றுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அகற்றப்படும் வாகனங்களுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் செலவிடும் பணத்தை வாகன சாரதியோ அல்லது உரிமையாளரோ செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா மேலும் தெரிவிக்கையில், பொசன் வலயங்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க கிட்டத்தட்ட 27,000 சமூக பொலிஸ் குழு உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், மேலும், பொசன் காலத்தில் கடமைக்காக 20,000 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...