Date:

உலக உடன்பாட்டை மீறிய கோட்டாபய அரசாங்கம் முஸ்லிம்கள் தொடர்பில் கேவலமாக நடந்தது! – சஜித்

கொரோனா காலத்தில் தகனமா

அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துகள் நிலவி வந்தபோதிலும் அதன் அடிப்படைகளில் முன்னோக்கி செல்லாது, தேசிய ரீதியாக நிபுணர் குழுவொன்றை நியமித்து அவர்களின் பரிந்துரை என்ற பெயரில் செயற்பட்டு, முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அடக்கமா தகனமா என்ற விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(18) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதியில், கோட்டாபய ராஜபக்க்ஷ ஜனாதிபதியின் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களையும், இஸ்லாமிய மதத்தையும் குறிவைத்து தீவிர இனவாத மற்றும் தீவிர மதவாத நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
அவர்களின் கலாசார மற்றும் மத அடையாளங்களை அழிக்க வலுவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் நீட்சியாகவே உலக சுகாதார ஸ்தாபனம் கூட வேண்டாம் என்று கூறிய போதும், கேவலமான செயலில் ஈடுபட்டனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள்...

🕌 35வது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு..

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த...

யோஷித மற்றும் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

கம்பஹா – கொழும்பு உள்ளிட்ட மேலும் பல பேருந்து சேவைகள் நிறுத்தம்

கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள்...