அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றவர்களின் சங்கங்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தேசிய அமைப்பு ஆகியன இணைந்து பத்தரமுல்ல பொல்துவ சந்தியில் இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.
இந்நிலையில், சுமார் 2 மணித்தியாலங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரச சங்கங்களின் உறுப்பினர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர்ந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது பொலிஸார் நீர்த்தாரகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் வீதியின் மறுபுறம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.