மின் கட்டணத்தினை 24 மாதங்களில் தவணை அடிப்படையில் செலுத்துவதற்காக, நுகர்வோருக்கு சலுகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
எனினும், இதன்போது, மேலதிக பணத்தை வட்டியாக செலுத்த வேண்டியேற்படும் என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.