ICC T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அமெரிக்க அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
160 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலைப்படுத்தியது,
இதையடுத்து, வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில், ஒரு ஓவரை கொண்ட சுவர் ஓவர் வழங்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அணி ஒரு ஓவர் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 6 பந்துகள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்து கொண்ட அமெரிக்கா அணி, மிக பழைமை வாய்ந்த பாகிஸ்தான் அணியை தோற்கடித்து கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.