பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு தொடர்பில் இந்த வாரம் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருள் விலைகளுக்கு ஏற்ப விலைகளை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோருகின்றனர்.
எனினும், அதற்கான உரிய அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.
எவ்வாறாயினும், உலக சந்தையில் நிலவும் விலை அதிகரிப்புக்கமைய பால்மா, கோதுமை மா, அரிசி, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை சிறிதளவேனும் அதிகரிக்க நேரிடும்.
எனவே அது தொடர்பில் இந்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.