Date:

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது இலங்கை

அமெரிக்காவில் நடைபெறும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி, தென் ஆபிரிக்கா அணியுடன் மோதியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிகூடிய ஓட்டமாக 19 ஓட்டங்களை குசல் மென்டீஸ் பெற்றுக்கொண்டதுடன், எஞ்சலோ மெத்தீவ்ஸ் 16 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் தென் ஆபிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நார்ட்ஜே 4 ஓவர்களுக்கு 7 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

78 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

இதன்படி, தென் ஆபிரிக்கா அணி 22 பந்துகள் மீதமிருக்க 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரத்தாகும் ரயில் சேவைகள் தொடர்பில் அறிவிப்பு

க​ரையோர மார்க்கத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (23) மற்றும்...

ரணிலை பார்க்க மஹிந்தவும் வந்தார்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சுகநலன்களை விசாரிப்பதற்காக...

ரணிலை பார்க்க சிறைச்சாலை வந்த சஜித்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித்...

6வது நாளாக தொடரும் தபால் வேலைநிறுத்தம்

தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது. மத்திய...