Date:

ஏட்ரியன் நிறுவனத்தின் இலங்கையின் புதிய முழுநீள தமிழ் திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு

இலங்கையின் முன்னணி இயக்குனர் தினேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகவுள்ள இலங்கையின் புதிய முழுநீள திரைப்படமான “அதிரன்” திரைப்படத்தின் பூஜை நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் கொழும்பு 4 அருள்மிகு ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் தீப்திகா ஞானசேகரன் மற்றும் திரைப்படத்தின் கதாநாயகனான முன்னணி நடிகர் சுதர்சனுடன் கதாநாயகியான சிங்கள சினிமாவின் முன்னணி கதாநாயகியான மிச்சலா தில்ஹாரா ஆகியோரும், திரைப்படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்களும் தொழில்நுட்பவியலார்களும் கலந்து கொண்டிருந்தனர்.


திரைப்படத்தின் ஆரம்ப பூஜைகளை மாணிக்க விநாயகர் ஆலய பிரதான சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றதை தொடர்ந்து, திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இயக்குனர் தினேஷ் கனகராஜ் கருத்து தெரிவிக்கையில்.

இத்திரைப்படமானது இலங்கையின் கிராமத்து சூழ்நிலையை பிரதிபலிக்கும் கதைக்களமாக அமைய இருப்பதாகவும் இத்திரைப்படமானது இலங்கையின் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக வர இருப்பதாகவும் மேலும் இத்திரைப்படம் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் திரையிடப்பட உள்ளதாகவும், அத்துடன் இத்திரைப்படமானது நேர்த்தியான, அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து எமது நாட்டின் திரைப்படத் துறையை முன்னேற்றுவதற்காக ஏட்ரியன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ள இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று, இலங்கையின் முன்னணி நடிகரும் இந்திய திரைத்துறையில் தடம் பதித்தவருமான கதாநாயகன் சுதர்சன் அவர்கள் கருத்துத் தெரிவித்தார். மேலும், இத்திரைப்படத்தில் இலங்கையின் பல புகழ்பூத்த முன்னணி கலைஞர்களும், முன்னணி தொழில்நுட்பவியலாளர்களும் சேவையாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ரணிலுக்கு பிணை

கோட்டை நீதவான் நீதிமன்றம் ரணிலுக்கு பிணை வழங்கியது. அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ரணில்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

ரணில் கைது: ஐ.தே.க ஆதரவாளர்கள் குவிந்தனர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...