Date:

சபுகஸ்கந்தயில் புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்

சபுகஸ்கந்தயில் ஒரு புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நாளாந்தம் ஒரு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் இதனுடாக சுத்திகரிக்கப்பட உள்ளது. அத்தோடு தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நாளாந்தம் 45 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்க கூடியவாறு புதுப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இவ்விரு செயற்திட்டங்களுக்கும் 600 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இது அமைதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலையேற்றத்தால் பொதுப் போக்குவரத்து இலவசம்

மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையினால் பொதுமக்கள்...

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் – IRGC எச்சரிக்கை

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின்...

Breaking சமாதான முன்மொழிவை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்வைத்த சமாதான முன்மொழிவை ஈரான்...

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த பதில்!

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை ஈரான் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.   திணிக்கப்பட்டுள்ள...