ரத்துபஸ்வல மக்கள் வெலிவேரிய பிரதேசத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், பாதுகாப்பு பிரிவினர் நடாத்திய துப்பாக்கி பிரயோகத்தின் போது, மூவர் உயிரிழந்த சம்பவம் குறித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்த நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேஜர் ஒருவர் அடங்களாக நான்கு இராணுவ வீரர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.
குடிநீர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ரத்துபஸ்வல மக்கள், வெலிவேரிய பகுதியில் 2013ம் ஆண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர்.