Date:

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் இது குறித்த யோசனை முன்மொழியப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கூறுகையில், கூலித்தொழிலாளி என்ற பெயர் மாறும் எனவும் கௌரவமான தொழில் அவர்களுக்கு கிடைக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச மற்றும் தேசிய தலைவர்கள் பலர் எதிர்வரும் மே தினத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்வார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான ஐயப்பாடு காரணமாக நேரடியாக இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டிய போதிலும் பெரும்பான்மையானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எதிர்பார்த்த வருமான இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11)...

பிரசன்னவுக்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள்...

” SLPP எம்.பிக்கள் வாகனங்களை ஒப்படைக்க தயார்”

தனக்கும் தனது சக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற...

🇨🇦 கனடா ஒரு சிறந்த நாடு 🇨🇦

அக்டோபர் 29 ஆம் திகதி,Amazon College இயக்குநர் அவர்கள் , Sri...